Author: மதுமிதா

மலையும் மலை சார்ந்ததும் – மதுமிதா

(அருணாச்சல பிரதேசத்தின் பின்புலத்தில் ஆங்கிலத்தில் படைப்புகளை எழுதும் எழுத்தாளர் மமங் தாய் அவர்களின்  படைப்புகளை முன் வைத்து) எழுத்துரு இல்லாத, எதையும் எழுதி வைத்து பழக்கம் இல்லாத பழங்குடிகள் தங்கள் கதைகளை நினைவில் நிறுத்தி...

நிலா என்றானவள் – எலிஃப் ஷஃபாக்

(தமிழில் மதுமிதா) (Moon Woman என்ற ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்) 1862 ஆம் வருடம் லியோ டால்ஸ்டாய் தன்னை விட பதினாறு வயது இளையவரான சோஃபியா ஆன்ட்ரீவ்னா பெர்ஸ்ஸை மணந்தார். பிற்காலத்தில்  படுதோல்வி...

பெயரை மாற்றிக் கொள்ளும் பெண்கள் – எலிஃப் ஷஃபாக்

(தமிழில்: மதுமிதா) எனக்கு பதினெட்டு வயதான பொழுது என்னுடைய பெயரை மாற்றிக்கொள்வது என்று முடிவு செய்தேன். எலிஃப் எனும் பெயரை எனக்கு ஓரளவு பிடிக்கும். துருக்கியில் சாதாரணமாக பெண்களுக்கு வைக்கப்படும் பெயர். ‘அலெஃப்’ எனும்...

வீதிகளில் பாடுபவர்கள் – மதுமிதா

(குர்அதுல்ஐன் ஹைதரின் ‘லக்னோ வீதிகளில் பாடுபவர்கள் மற்றும் பிற கதைகள்’ என்ற தொகுப்பை முன்வைத்து) குர்அதுல்ஐன் ஹைதர் உருது மொழியின் தலை சிறந்த இலக்கியவாதி. அவருடைய பல ஆக்கங்களைத் தானே ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்த்தவர். “River...

அறமும் அறச்சீற்றமும் – மதுமிதா

 (மகாஸ்வேதா தேவியின் ‘கவி வந்த்ய கட்டி காயியின் வாழ்வும் சாவும்’ நாவலை முன் வைத்து) பீமாதல் நாடு ரூப் நாராயண் ஆற்றின் உந்தி சுழியென அமைந்துள்ளது. என்னதான் பொல்லாத ஆறாக இருந்தாலும், ரூப் நாராயண்...

சமநோக்கின் மிடுக்கும் மிளிர்வும் – மதுமிதா

(பெருந்தேவியின் தேசம் சாதி சமயம், உடல் பால் பொருள் ஆகிய கட்டுரை தொகுப்புகளை முன்வைத்து) தமிழ் பண்பாட்டு பின்புலத்தில் பாலியல், சாதிய வன்முறைகள் பற்றிய தரவுகளும், அதன் அடுக்குகளின் குணங்களும் நிலைகளும் வெறும் விமர்சனங்களாக,...

சாளரத்தின் வழியான பிரபஞ்சம் – மதுமிதா

(ஆஷாபூர்ணாதேவியின் சிறுகதைகளை முன்வைத்து) ஆஷாபூர்ணா தேவி அறுபது ஆண்டுகள் இலக்கியம் படைத்தவர். மனித இயல்பை அதன் பல்வேறு சரடுகளின் வழியாக எடுத்து எழுதியவர். அவர்களின் திரிபுகளை, அபத்தங்களை, அச்சங்களை, ஆசைகளை, மிக நுணுக்கமாக அவர்கள்...

க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகள் (2) – மதுமிதா

பகுதி 2 க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகளில், நடேஷ்டா ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் தொடர்ந்து எழுதியவர். 1840களில் தொடங்கி 1889இல் அவரது மரணம் வரை நீண்டது அவரது இலக்கிய வாழ்க்கை. தனது 18வது அகவையில் எழுத ஆரம்பித்தவர்...

க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகள் (1) – மதுமிதா

(பகுதி -1) 1860களில் ப்ரோன்டே சகோதரிகளின் ஆக்கங்களில் திளைத்திருந்த ரஷ்ய வாசகர்கள், பெரும்பாலும் க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகளை அறிந்திருக்கவில்லை. நடேஷ்டா, சோஃபியா, ப்ரஸ்கோவியா ஆகிய மூவரும் க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகள். நடேஷ்டா V.Krestovsky என்ற பெயரிலும், சோஃபியா...

உள்ளறைகள் – மதுமிதா

(உமாமகேஸ்வரியின் அஞ்சாங்கல் காலம் நூலை முன்வைத்து) இலக்கியத்தில் வீடு என்ற படிமம் பொதுவாக இரு தளங்களில் கையாளப்படுகிறது, உன்னதமான ஒரு இலக்காகவோ அல்லது உதறப்பட வேண்டிய தளையாகவோ. உமா மகேஸ்வரியின் பெண்களோ வீட்டையே உலகமாகக்...