(தமிழில் ஆனந்த் ஸ்ரீநிவாசன்) * (சில பொது அவதானிப்புகள்) பழந்தமிழகத்தின் கவி மரபு மலையாளத்திற்கும் உரியது என்பதால் சங்ககாலம் முதலே மலையாளத்திலும் பெண்குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்று சொல்லலாம். ஒளவையாரும் காக்கைப்பாடினியாரும் நச்செள்ளையாரும் வெள்ளிவீதியாரும்...