பனிரெண்டாம் வயதில் திருப்பாவை வழியே அறிமுகமாகிறாள் கோதை எனும் ஆண்டாள் எனும் நாச்சியார். ஊரிலுள்ள பெரிய கோவிலில் மார்கழி மாதம் காலை மாலையில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பயிற்றுவிக்கப்படும். ஆர்வமுடைய பள்ளி மாணவர்கள் வந்து...