Category: ஆகஸ்ட் 2025

”பெண்ணுக்கு லட்சிய வாழ்க்கை வேண்டாமா?” – சந்திரா தங்கராஜ்

சந்திரா தங்கராஜ் 2000-இல் தன் எழுத்துப்பயணத்தைத் தொடங்கியவர். இதழியல், சினிமா என பிற துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தவர். இதுவரை நான்கு கவிதைத்தொகுப்புகளும், மூன்று சிறுகதைத்தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. ஒரு வார காலமாக அவருடனான உரையாடல்...

மலையாளத்தில் பெண்கவிமரபு – பி. ராமன்

(தமிழில் ஆனந்த் ஸ்ரீநிவாசன்) * (சில பொது அவதானிப்புகள்) பழந்தமிழகத்தின் கவி மரபு மலையாளத்திற்கும் உரியது என்பதால் சங்ககாலம் முதலே மலையாளத்திலும் பெண்குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்று சொல்லலாம். ஒளவையாரும் காக்கைப்பாடினியாரும் நச்செள்ளையாரும் வெள்ளிவீதியாரும்...

மனைவியரின் பலிபீடம் – ஜெயமோகன்

(அலக்ஸாண்டிரா போபாஃப் எழுதிய ‘ஒரே நிழல்’ நூலுக்கு எழுதிய முன்னுரை) முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விமர்சகர், இலக்கிய ஆய்வாளர் வேதசகாய குமார் என் இல்லத்திற்கு ‘பேயறைந்த’ முகத்துடன் வந்தார். புதுமைப்பித்தன் தன் மனைவி கமலாவுக்கு...

லீஸ மெய்ட்னர்: அணு ஆற்றலின் அன்னை – வெங்கட் ரமணன்

அது 1945-ஆம் ஆண்டு. இரண்டாம் உலகப்போர் என்ற பேரவலம் முடிவுக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன.  நவம்பர் குளிரில் ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஒரு விஞ்ஞானிகள்  குழு கூடியிருந்தது. மிகச் சில அறிஞர்களையே கொண்டிருந்த...

பகீரதனின் பகீரதி – கமலதேவி

(அ.வெண்ணிலாவின் நீரதிகாரம் நாவல் குறித்து) எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் நீரதிகாரம் நாவலை வாசிக்கும் போது நம் புராணத்தில் உள்ள பகீரதன் கதை மனதில் வந்தது. பகீரதன் இஷ்வாகு குலத்தை சேர்ந்த ராமனின் முன்னோர். பகீரதனின் முன்னோர்கள்...

பெயரை மாற்றிக் கொள்ளும் பெண்கள் – எலிஃப் ஷஃபாக்

(தமிழில்: மதுமிதா) எனக்கு பதினெட்டு வயதான பொழுது என்னுடைய பெயரை மாற்றிக்கொள்வது என்று முடிவு செய்தேன். எலிஃப் எனும் பெயரை எனக்கு ஓரளவு பிடிக்கும். துருக்கியில் சாதாரணமாக பெண்களுக்கு வைக்கப்படும் பெயர். ‘அலெஃப்’ எனும்...

தாய்மடியில் நான் தலையைச் சாய்க்கிறேன் – சக்திவேல்

1 நாம் ஏன் அவளாக விரும்புவதில்லை. ஏன் நம்மால் வானையும் கடலையும் உலகையும் சுமக்க முடிவதில்லை. என்ற கேள்வியில் மையம் கொள்கிறது வயலட்டின் இதோ நம் தாய் குறுநாவல்.  இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்,...

இலையுதிர்கால நிலவு தங்கிச் சென்ற வீடு – ரா. செந்தில்குமார்

(ஒனோ நோ கொமாச்சி கவிதைகள் பற்றி) ஒனோ நோ கொமாச்சி பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டில் ஜப்பானில் வாழ்ந்த பேரழகி. கொமாச்சியின் வாகா கவிதைகள் ஜப்பானிய இலக்கியத்தில் அழியா இடம் பெற்றவை. கொமாச்சி, ஜப்பானியர்களின் வாழ்வில்...

1 + 1 (சிறுகதை) – பூர்ணிமா தம்மிரெட்டி

(தமிழில் – அவினேனி பாஸ்கர்) பூர்ணிமா தம்மிரெட்டி – தெலுங்கு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர். தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செயல்படுகிறார். 2022ஆம் ஆண்டு சங்கம் ஹவுஸ் இன்டர்நேஷனல் ரைட்டர் ரெசிடென்சியில் தங்கி...

பழையோள் என்னும் மூத்த தேவியின் வழிபாடு – ஜி.எஸ்.எஸ்.வி நவின்

1 இந்து தெய்வ மரபில் ஒரு தெய்வமென்பது தனியொரு பண்பைக் கொண்ட தெய்வமென்றோ, தனித்த அடையாளம் கொண்ட தெய்வமென்றோ வகைப்படுத்த முடியாது. இதே விதி புத்த, சமண தெய்வ உருக்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு செயலுக்கும்...

நிழலில் மலர்ந்த புதுமையின் பாடல் – பா.ரேவதி

(முரசாகியின் ’கென்ஜியின் கதை’ நாவல் குறித்து) உலகத்தின் முதல் நாவல் என்று கருதப்படும் நாவலை எழுதியவர் பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானைச் சேர்ந்த முரசாகி ஷிகிபு  என்கிற ஒரு பெண் எழுத்தாளர் என்று அறிந்தபோது...

சூரெய்ல் (சிறுகதை) – கமீலா ஷம்ஸி

(தமிழில் – நரேன்) கமீலா ஷம்ஸி (Kamila Shamsie – 13 Aug 1973) – ஆங்கிலத்தில் எழுதி வரும் பாகிஸ்தானிய எழுத்தாளர். பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்து வளர்ந்தவர். 2007ல் லண்டனிற்கு குடிபெயர்ந்து தற்போது...

அம்மணி – ஹெப்சிபா ஜேசுதாசன்

ஹெப்சிபா ஜேசுதாசன் நூற்றாண்டை முன்னிட்டு ‘நானும் என் எழுத்தும்’ என்ற கட்டுரை கடந்த இதழில் வெளியானது. இவ்விதழில் சிறுகதை பற்றி ஹெப்சிபா எழுதிய கட்டுரை இடம்பெறுகிறது. ‘அம்மணி’ என்ற புனைபெயருடன் எழுதப்பட்ட இந்த ரசிக...

நினைவுத் தீ – ரம்யா

(கமலா விருத்தாசலத்தின் சிறுகதைகளை முன்வைத்து) “நான் உயர்ந்த கதைகள் என்று கருதுபவைகளுள் உன்னுடையதும் ஒன்று. அப்படிப்பட்ட ரூபத்தில் அமைந்திருக்கிறது. அமெரிக்காவில் பரிசு பெற்ற கதை அமைப்பின் வாய்ப்பு இதற்கு அமைந்திருக்கிறது. நான் சொல்வதில் உனக்கு...